விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இருக்கும் சிக்கந்தர் ராசா

0
167

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளினால் அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிம்பாவே அணியின் சிக்கந்தர் ராசா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த மொஹமட் நபியை பின் தள்ளி சிக்கந்தர் ராசா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

விராட் கோலி 15 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ள நிலையில் அவரின் சாதனையை முறியடிக்க சிக்கந்தர் ராசா இன்னும் 2 முறை ஆட்டநாயகள் விருதை பெற வேண்டும். இவர்களை அடுத்து சூர்யகுமார் யாதவ் 13 முறையும் ரோஹித் சர்மா 12 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

அத்துடன் நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலியை ஏற்கனவே சிக்கந்தர் ராசா பின் தள்ளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.