24 மணி நேரத்தில் 99 பார்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை

0
151

உலக சாதனைகளை பட்டியலிடும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் விதவிதமாக எத்தனையோ சாதனைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் சிலரின் சாதனைகள் வினோதமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அப்படி ஒரு சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நண்பர்கள் இரண்டு பேர் செய்திருக்கிறார்கள்.

சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் (வயது 26) ஆகியோர் 24 மணி நேரத்தில் 99 மதுபானசாலைகளில் சென்று மது அருந்தியுள்ளனர்.

இதற்காக 1,500 ஆஸ்திரேலிய டொலர்கள் செலவு செய்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இப்படி ஒரு உலக சாதனை படைப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் கூறி உள்ளனர். நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரியவகை நோயான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் எம்எஸ் ஆஸ்திரேலியா என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காகவும் சிட்னியில் கொரோனா பரவல் காரணமாக அழிந்துபோன இரவு நேர கேளிக்கை வாழ்க்கைக்கு புத்துயிர் அளிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரத்தில் 100 மதுபானசாலைக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 99வது மதுபானசாலைக்கு சென்று குடித்தபோது 100வது மதுபானசாலை என தவறாக கணக்கிட்டு தங்கள் முயற்சியை நிறுத்திவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.