வெளியானது உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்

0
148

இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜி மெலோனி மற்றும் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் 2023ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த பெண்களில் இடம்பெற்றுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் உலகின் நான்காவது சக்தி வாய்ந்த பெண்மணியாக மெலோனி பட்டியலிடப்பட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் 32வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஃபோர்ப்ஸ் அதன் 2023ஆம் ஆண்டு பட்டியலை நான்கு முக்கிய அளவீடுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. “பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு” ஆகியவை மூலம் இந்த அளவீடு தீர்மானிக்கப்படுகின்றது.

உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடத்திலும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பாப்ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட் 2023 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது சக்தி வாய்ந்த பெண்மணியாக பட்டியலிடப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில் பத்தாவது சக்திவாய்ந்த பெண்மணியாக மெலிண்டா கேட்ஸ் பட்டியலிடப்பட்டார்.

Ursula von der Leyen

ஜியோர்ஜியா மெலோனி நான்காவது சக்தி வாய்ந்த பெண்

இத்தாலியின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி ஒக்டோபர் 2022இல் பதவியேற்றார். மார்ச் 2014 முதல் இத்தாலியின் வலதுசாரி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் தலைவரான மெலோனி, சீன விரிவாக்கத் திட்டமான Belt and Road இல் இருந்து இத்தாலி வெளியேறுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

2023 நவம்பரில் அவர் ஆதரவளித்த அரசியலமைப்புச் சீர்திருத்தம் அவரது அரசியல் முக்கியத்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க தருணம் ஆகும்.

இந்த அரசியலமைப்புச் சீர்திருத்த முன்மொழிவு கிட்டத்தட்ட ஜனாதிபதி முறையில் பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களில் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாட்டை அடையாளப்பூர்வமாக வழிநடத்துகிறார்.

2019 இல் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானதை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அமைச்சரவை இலாகாக்கள் குறைக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சீதாராமன் மிக மூத்த பெண்ணாக இடம்பிடித்தார். 2019 இல் முதல் நிர்மலா சீதாராமன் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்யசபா உறுப்பினராகவும் உள்ளார்.

இவர்களை தவிர ரோஷ்னி மல்ஹோத்ரா நாடார் (60), சோமா மண்டல் (70) மற்றும் கிரண் மஜும்தார்-ஷா (76) ஆகியோரும் போர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.