ஆக்ரோஷமான தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி! காந்தாரா இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியானது

0
136

‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த காணொளி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.