ஜோதிகா ஐ லவ் யூ! காதல் தி கோர் படத்தினை பார்த்துவிட்டு சமந்தா போட்ட பதிவு

0
130

காதல் தி கோர்  படத்தினை பார்த்துவிட்டு பிரபல நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரியில், இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக இந்த திரைப்படம் மாறி உள்ளது.

உங்களுக்கு நீங்களே ஒரு நன்மை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், தயவு செய்து இந்த திரைப்படத்தை சென்று பாருங்கள்.

மம்மூட்டி சார் நீங்கள் எனக்கு ஹீரோ, உங்களுடைய இந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர எனக்கு பல காலம் பிடிக்கும், ஜோதிகா ஐ லவ் யூ” என்று தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.