சர்வதேச இசையமைப்பாளராகும் AR ரகுமானின் மகள் கதீஜா! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு

0
225

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

பிரிட்டன் – இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்திற்கு இசையமைப்பாளராக கதீஜா ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் நடிக்கும் இப்படத்தை பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ளார்.

இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் கோவாவில் நடந்து வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.