2023 தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பூநகரிக்கு பெருமை சேர்ந்த மாணவர்கள்..

0
239

மாகாண மட்ட 800 மீட்டர், 1500 மீட்டர் 5000 மீட்டர், அரை மரதன் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி நான்கு போட்டிகளிலும் முதலிடம் பெற்று பூநகரி குமுழமுனை சேர்ந்த செல்வன் சுமன் கீரன் தேசியமட்டத்துக்கு தெளிவாகியுள்ளார்.

தேசிய மட்டத்தில் அரை மரதன் போட்டியில் இரண்டாம் இடத்தையும் 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவ்வாறே கிருஷ்ணமூர்த்தி மகீசன் (நாகபடுவான்) மாகாணமட்ட அரை மரதன் போட்டியில் மூன்றாம் இடத்தையும் மாகாணமட்ட 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தேசிய மட்ட அரை மரதன் போட்டியில் 13-ஆம் இடத்தை பெற்றிருந்தார்.

செல்வி கமலேசுவரன் அனுசியா (பூநகரி கிராஞ்சி) மாகாணமட்ட ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி இருந்தார்.

2023 தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டி: பூநகரிக்கு பெருமை சேர்ந்து தந்த மாணவர்கள்! | 2023 National Level Physiologist Pooneryn Students

செல்வி சாந்தரூபன் பிரிந்தகி ( பூநகரி முழங்காவில்) மாகாணமட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றிருந்தார். இவர்கள் நால்வரையும் பாடசாலை குமுகாயம் ( சமூகம்) சார்பாக வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பங்குபற்றல் ஒழுங்குகளை விளையாட்டு பொறுப்பாசிரியர் றொசுகோ அவர்கள் செயல்படுத்தி இருந்தார்.

இவர்களுக்கான பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் எடிசன் உடற்கல்வி ஆசிரியர்களான கமலினி, சுதர்சிகா ஆகியோர் வழங்கி இருந்தனர்.   

இவர்களுடன் மாணவர்களை உரிய இடங்களுக்கு அழைத்துச் சென்று இவர்களுக்கு உதவியாக இருந்த ஆசிரியர் திபாகர் அவர்களையும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டி நன்றி கூறுகின்றோம்.

இம்மாணவர்களின் பயிற்சிச் செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் தங்குமிடச் செலவுகள், உணவுச்செலவுகள் என்பவற்றுக்கு பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் பாலசிங்கம் பேரின்ப நாதன் (நோர்வே ) ஐயம்பிள்ளை இரவீந்திரராசா (நோர்வே ) வேலுப்பிள்ளை கணேசமூர்த்தி (பிரான்ஸ்) நிதி அன்பளிப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery