அன்பான உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம் (video)

0
147

கடந்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமான , இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வராத நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ல ஹமாஸின் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது.

அன்பான உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் ராணுவம் அந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

அல்-ஷிபா மருத்துவமனை சுரங்கப்பாதை

காசாவின் மிகப்பெரிய  அல்-ஷிபா மருத்துவமனையிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது.

டியர் உலகமே... இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? இஸ்ரேல் வெளியிட்ட காணொளி! | Dear World Is This Proof Enough For You By Israel

மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் அக்கறை கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது.

இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் தயாரானது. இதற்கு இஸ்ரேல் மந்திரசபை ஒப்புதல் அளித்துள்ளது.

50 பேருக்கு மேல் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படு் எனவும் இஸ்ரேல் மந்திரி சபை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலாக இஸ்ரேல், தனது நாட்டில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலரை வெளியிட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் எப்போதும் வேண்டுமென்றாலும் கையெழுத்தாகலாம்.

இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது காலதாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.