நடிகை ஷாலினியின் 43வது பிறந்தநாள்! குவியும் வாழ்த்துக்கள்

0
130

நடிகை ஷாலினி நேற்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக நடிகை ஷாலினி அவதாரம் எடுத்தவர். கதாநாயகியாக அவர் நடித்த அனைத்துப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றார். நடிகர் அஜித்துடன் இணைந்த அமர்க்களம் படம் இந்த அட்டகாசமான ஜோடியின் காதலுக்கு விதை போட்டது. இதையடுத்து 2000 ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

Happy Birthday Shalini

இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி ஷாலினிக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின் அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார். பிறகு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. சமீப காலமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷாலினிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Happy Birthday Shalini