சலார் படத்தின் ட்ரைலர் குறித்து புதிய போஸ்டருடன் அறிவித்த படக்குழு

0
151

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் டிசம்பர் 1ம் திகதி மாலை 7.19 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 22ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் டிசம்பர் 1ம் திகதி மாலை 7.19 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.