இந்தியாவுடன் மோதல் கனடாவுக்கு தான் இழப்பு: கனடா முன்னாள் பிரீமியர்

0
181

இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்குத்தான் இழப்பு, இந்தியாவுக்கு அல்ல என்று கூறியுள்ளார் கனடா முன்னாள் பிரீமியர் ஒருவர்.

G 20 மாநாட்டுக்காக இந்தியா வந்தபோது அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கனடா மண்ணில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியின் இந்தியா இருப்பதாக கனடா நாடாளுமன்றத்திலேயே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்ட இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மோதல் ஏற்பட்டது.

இரு நாடுகளும் மற்ற நாட்டின் தூதர்களை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற மோதல் மேலும் அதிகமானது. இந்நிலையில் இந்தியா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதை கனடா பிரதமரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்பதை அவரது சமீபத்திய கூற்றுக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ட்ரூடோ, தாங்கள் இப்போது இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை என்றும் ஆனாலும் இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்குத்தான் இழப்பு என கனடா தரப்பிலிருந்தே ஒருவர் பேசியுள்ளதைத் தொடர்ந்தே ட்ரூடோ இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் பிரீமியரான Christy Clark என்பவர்தான் இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளவர். இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று குறித்த இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவுடனான மோதலால் அந்த ஒப்பந்தம் தாமதமாகிவருகிறது. அப்படி சரியான நேரத்தில் இரு நாடுகளுக்குமிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக்வில்லையானால் அதனால் இழப்பு இந்தியாவுக்கு அல்ல, கனடாவுக்குத்தான் என்று கூறியுள்ளார் Christy Clark. 

கனடா உற்பத்தி செய்யும் பொருட்கள் மிக உயர்ந்த மதிப்பும் தரமும் கொண்டவை என்பது உண்மைதான். ஆனால் இந்தியா கனடாவை விட்டுவிட்டு வேறொரு நாட்டிடமிருந்து பொருட்களைப் பெறமுடியும். ஆக பாதிப்பு கனேடிய பணியாளர்களுக்கும், கனேடிய பொருளாதாரத்துக்கும்தான். நம் தரப்பினர் கனடாவின் வளத்தை அதிகரிக்க முயலும் நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்படுவதால் நம் நாட்டுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார் Christy Clark.