காளையை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் இளைஞர்: வைரலாகும் வீடியோ!

0
191

நைஜீரிய நாட்டில் இளைஞர் ஒருவர் காளையை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலர் வெளியே செல்லும் போது தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் ஏற்றிச் செல்வது வழக்கமாகிவிட்டது.

இருப்பினும் ஒரு காளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதை பார்த்தீர்களா? ஆம் இதுபோன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை பார்த்த பலரும் தங்கள் ஆச்சரியத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.