உலகின் தலைசிறந்த 50 இனிப்பு வகைகளில் இந்தியாவிற்கு 2 இடங்கள்

0
211

உலகளவில் தலைசிறந்த 50 இனிப்பு வகைகளில் இந்திய 2 இடத்தை பிடித்துள்ளதாக பிரபல டேஸ்ட்அட்லாஸ் அமைப்பு ஆய்வில் தகவலளித்துள்ளது.

இந்தியாவிற்கு 2 இடங்கள்

இந்தியாவின் பிரபல இனிப்புகளான காஜூ கத்லி மற்றும் ரச மலாய் இடம் பெற்றுள்ளன. இதில், ரச மலாய்க்கு 31வது இடமும், காஜூ கத்லிக்கு 41வது இடமும் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஒரு பிரியமான இனிப்பாக கருதப்படும் ரச மலாய், வைட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பன்னீர் சீஸ், பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கப்படுவதாகும்.

click here – https://www.instagram.com/p/CzE11zFoVSE/?utm_source=ig_web_copy_link

காஜூ கத்லி , முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய், வெண்ணெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும்.

மேலும் முதல் மூன்று இடங்களில் க்ரீப்ஸ், பாம்போகாடோ மற்றும் கியூசோ ஹெலடோ ஆகிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.