விக்ரமின் தங்கலன் படத்தின் டீசர் நவம்பரில் வெளியாகும்; புதிய போஸ்டருடன் அறிவிப்பு

0
221

நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீசர் நவம்பர் 1ம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக மிரட்டிய விக்ரம், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராவிட்டார். பா.ரஞ்சித்துடன் முதன்முறையாக தங்கலான் படத்தில் இணைந்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களங்களில் தனக்கே உரிய அடையாள அரசியலை பேசும் பா ரஞ்சித்தும், நடிப்பில் மிரட்டும் விக்ரமும் இணைந்திருப்பது மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி தங்கலான் டீசர் நவம்பர் 1ம் திகதி வெளியாகவுள்ளதாக நடிகர் விக்ரம் தனது இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் மிரட்டலான போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.