அர்ஜுன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது; ஐஸ்வர்யா – உமாபதி ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்

0
237

ஐஸ்வர்யா – உமாபதி ஜோடியின் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் பட்டத்து யானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தற்போது தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை இவர் காதலித்து மணமுடிக்கவுள்ள செய்திகள் பரவியது.

இப்படியான சூழலில் சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளதுடன் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றது.

மேலும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.