இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்! வெளியீட்டுக்கு தயாராகும் KH 234 படத்தின் டீசர்

0
179

ராஜ்கமல் பிலிம்ஸ் தனது ட்விட்டரில் கமல்ஹாசனும் மணிரத்னமும் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள் இனி கொண்டாட்டம் தான் என கேப்ஷனும் கொடுத்துள்ளது. இதன் மூலம் KH 234 டீசர் தயாராகியுள்ளது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணையும் KH 234, ரசிகர்களுக்கான ஃபேன்பாய் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இது நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தால் இன்னும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நவம்பர் 7ம் திகதி வெளியாகும் டீசரில் KH 234 படம் பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.