பிரம்ம முகூர்த்தம் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

0
135

பிரம்ம முகூர்த்தம் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் கலவரங்களை நகைச்சுவையுடன் எடுத்து காட்டும் திரைப்படமாக பிரம்ம முகூர்த்தம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. மேலும் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரம்ம முகூர்த்தம் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.