விரைவில் திருமணம்; காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமலா பால்

0
192

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அமலா பால் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அமலா பாலின் பிறந்த நாளான இன்று அவரது நண்பர் ஜகத் தேசாய் என்பவர் மோதிரம் கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் திருமண வாழ்க்கை இவருக்கு பெரிதாக இருவருக்கும் பொருந்தாத நிலையில் 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

விவாகரத்திற்குப் பிறகு அமலாபால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமலா பால் இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாள் சர்ப்ரைஸாக அவரின் நெருங்கிய நண்பர் ஜனா தேசாய் என்பவர் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அமலாபாலும் சம்மதம் தெரிவித்துவிட இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகத் தெரிகிறது.