கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேறச் சொன்னது இதனால்தான்…

0
206

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொன்னது ஏன் என்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தூதரக உறவில் பாதிப்பு

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேறச் சொன்னது இதனால்தான்... வெளியுறவு அமைச்சர் விளக்கம் | Canadian Diplomats Were Asked To Leave India

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, கனடா இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது.

தொடர்ச்சியான குறுக்கீடு

இந்நிலையில், கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொன்னது ஏன் என்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேறச் சொன்னது இதனால்தான்... வெளியுறவு அமைச்சர் விளக்கம் | Canadian Diplomats Were Asked To Leave India

கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த அவர், இந்திய உள்விவகாரங்களில் கனேடிய தூதர்களின் குறுக்கீடு கவலையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

தொடர்ச்சியாக கனேடியர்கள் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் கவலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே அவர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டது என்று கூறிய ஜெய்ஷங்கர், வியன்னா ஒப்பந்தத்திற்குட்பட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.