மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள்.. காசா எல்லையில் நிறுத்தி வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம்

0
187

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காசாவில் உள்ள பெரும் மருத்துவமனையான அல்ஷிபா அல்குட்ஸ் இந்தோனேசிய மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பாலஸ்தீன ஊடகங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்குட்ஸ் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை காண்பிக்கும் வீடியோவொன்றை ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது.அந்த கட்டிடம் குவைத் மருத்துவமனைக்கு அருகில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் தனது படைகளை இஸ்ரேல் ராணுவம் காசா எல்லையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா எல்லையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் | Israeli Army Stationed At The Gaza Border

ஆயினும் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் காசாவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.