இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதல்; அவுஸ்திரேலியா கண்டனம்

0
154

பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கண்டிப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனையிலிருந்து வெளிவரும் காட்சிகள் கடும் மனவேதனையை ஏற்படுத்துவதுடன் பெருமளவு உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிந்தனைகள் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது முதலிடம் பெறவேண்டும் என்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களிற்கான மதிப்பு மிகமுக்கியமானது எனவும் தெரிவித்துள்ளது.