இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இருந்து விலகி இருக்குமாறு ஹிஸ்புல்லாவை எச்சரித்த பிரான்ஸ்

0
180

இஸ்ரேல் மாறும் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இருந்து விலகி இருக்குமாறு பிரான்ஸ் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் போராளிகளை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் லெபனான் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இருதரப்பும் மோதல் நிலைமைகளை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமெனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மோதல் இடம்பெறும் நிலையில் முதலில் லெபனான் பலிகடா ஆக்கப்படுமென பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

போரை எதிர்கொள்ளும் வகையில் உரிய அதிகாரிகள் இல்லாததன் காரணமாக லெபனான் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டதில் இருந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏனைய பலஸ்தீன அமைப்புகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையிலே, ஈரான் பிராந்தியத்தில் அமைதிக்கு பாதகம் விளைவிப்பதனை தவிர்க்க வேண்டுமென பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி ஈரானிய ஜனாதிபதியை தொடர்புகொண்டு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கவோ அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவோ பிரான்ஸ் எந்தவொரு நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.