இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம்..

0
145

இஸ்ரேலிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் திட்டம் எதனையும் வகுக்கவில்லை. எனினும் தனது பிராந்தியத்தில் நலன்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபடும் என அவர்  கூறியுள்ளார்.

பாதுகாப்பு விடயத்தில் இஸ்ரேல் மேலும் பல வேண்டுகோள்களை விடுக்கலாம் எனவும், அமெரிக்கா அவற்றை வேகமாகபூர்த்தி செய்ய முயலும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாசிற்கு ஆதரவு

மேலும், ஹமாசிற்கு ஆதரவளித்ததன் மூலம் ஈரான் இதில் தொடர்புபட்டுள்ளது என்பது குறித்து சிறிதளவு சந்தேகமும் இல்லை என ஜோன் கேர்பி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க படையினரின் உள்நுழைவு: இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம் | White House Briefing On Israel Issue

இந்நிலையில், ஈரான் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் அமெரிக்கா காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.