மூட்டை பூச்சிகளை பிடிக்க மோப்ப நாய்களை களமிறக்கும் பிரான்ஸ்!

0
202

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் , ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது .

மோப்ப நாய்கள் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் புகார்கள் வந்தன.

மூட்டை பூச்சிகளை பிடிக்க மோப்ப நாய்களை களமிறக்கும் பிரான்ஸ்! | France Deploys Sniffer Dogs To Catch Bugs

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை

எனினும் இதுவரை ஒரு மூட்டைப்பூச்சியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறிய அமைச்சு மோப்ப நாய்களைக் கொண்டு பூச்சிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும் என தெரிவித்துள்ளது.

அதோடு மூட்டைப்பூச்சிகள் உள்ளனவா என்று இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை வெளியிடப்படும் போக்குவரத்து அமைச்சர்  கூறியுள்ளார். இந்நிலையில் பாரிஸ் மக்களிடையே மூட்டைப்பூச்சி பற்றிய அச்சத்தை நீக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. 

மூட்டை பூச்சிகளை பிடிக்க மோப்ப நாய்களை களமிறக்கும் பிரான்ஸ்! | France Deploys Sniffer Dogs To Catch Bugs