நூலிழையில் உயிர் பிழைத்த ’குக் வித் கோமாளி’ வெங்கடேஷ் பட் மகள்!

0
165

சமையல் கலைஞரான வெங்கடேஷ் பட் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்து பிரபலமானவர். இந்நிலையில் வெங்கடேஷ் பட் சமூகவலைதளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு நானும் என் மகளும் வந்திருந்தோம்.

அப்போது, எஸ்கலேட்டரில் எனது மகளின் கால் சிக்கிக் கொண்டது. நான் அவளின் கையை பிடித்து இழுத்ததால் அவளின் கால் தப்பித்தது. நல்லவேலையாக இழுத்து என் மகளை காப்பாற்றினேன்.

நான் மட்டும் என் மகளை இழுக்கவில்லை என்றால் என் மகளின் கால் துண்டாகி இருக்கும். இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகத்திற்கு புகார் கொடுத்திருக்கிறேன். குழந்தைகளோடு வரும் அனைவரும் கவனமாக இருங்கள் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகம் வெங்கடேஷ் பட்டை தொடர்பு கொண்டு அடுத்து எடுத்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசியதாக தெரியவந்துள்ளது.