தனது 170வது திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்

0
230

ஞானவேல் இயக்கும் திரைப்படம் குறித்த அப்டேட்டை ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க ரஜினி நடிப்பில் அவரின் 170வது திரைப்படம் உருவாகவுள்ளது.

நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் செல்கிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை, தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். என்னுடைய 170வது படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என கூறினார்.