பிக்பாஸ் வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு சென்ற 6 போட்டியாளர்கள்

0
205

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் 7 தொடங்குவதற்கு முன்பே இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கும் என்று கூறப்பட்டது.

இரண்டு வீடுகளில் போட்டியாளர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அதை ரசிகர்களுக்கு விளக்கும் வகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மற்றொரு கமல்ஹாசன் தோன்றி, இரண்டு வீடுகள் குறித்தும் பேசினார்.

இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, யுகேந்திரன் வாசுதேவன், ஐஸ்வர்யா, அனன்யா ராவ், வினுஷா தேவி, பூர்ணிமா ரவி, பவா செல்லதுரை, விக்ரம், நிக்சன், அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், சரவணன், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகியோர் 18 பேரும் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த வார தலைவராக விஜய் வர்மா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல் டாஸ்காக, தன்னை கவராத 6 போட்டியாளர்களை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் இந்த வார தலைவராக இருக்கும் விஜய் வர்மாவை கவராத 6 பேர் பட்டியல் வந்துள்ளது.

ஐஸ்வர்யா, நிக்சன், பவா செல்லதுரை, ரவீனா, அனன்யா ராவ், நிவிஷா ஆகியோர் பெயர் வந்து உள்ளது. விஜய் வர்மாவை கவராத 6 பேர் பட்டியலை அறிவித்த பிக்பாஸ் அவர்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி அடுத்த வீட்டுக்கு மாற்றியுள்ளார்.

இந்த வீட்டிற்குள் சென்ற ஆறு பேரும் எந்த காரணம் கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியேற கூடாது எனவும், அந்த வீட்டை விட்டு மற்ற 12 போட்டியாளர்கள் இருக்கும் வீட்டிற்குள் வரும் போது தான் பிக் பாஸ் பேசுவார் என்றும் அறிவிக்கப்படுகின்றது. முதலாவது ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்று இரவு என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.