இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

0
295

பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு ஒரு சில போன்களில் தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இனி வாட்ஸ் அப் இல்லை

இந்நிலையில் வாட்ஸ்அப் 30 நாட்களுக்குப் பிறகு இந்த ஸ்மார்ட் போன்களில் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. அந்தவகையில், புதிய புதிய அப்டேட்களை கொண்டு வரும் வாட்ஸ்அப் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் வாட்ஸ்அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்டு 4.1 OS போன்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

இனி இந்தப் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது

மேலும், Nexus 7 (Android 4.2 க்கு மேம்படுத்தக்கூடியது), Samsung Galaxy Note 2, HTC, சோனி எக்ஸ்பீரியா இசட், LG Optimus G Pro, Samsung Galaxy S2, Samsung Galaxy Nexus, HTC சென்சேஷன், Motorola Droid Razr, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், Samsung Galaxy Tab 10.1, ஆசஸ் ஈ பேட் ஆகிய போன்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது எனவும் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பட்டியலில் உள்ள போன்கள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், யாராவது இதைப் பயன்படுத்தினால், அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.