தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் தெரியுமா..!

0
317

ஓட்ஸ் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு. ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவாகும். ஓட்ஸ் உடல் எடையைக் குறைப்போருக்கு மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.

சமீப காலமாக நிறைய பலர் தங்களின் தினசரி காலை உணவாக இந்த ஓட்ஸை உட்கொள்கிறார்கள்.

ஓட்ஸ் அனைவருக்குமே ஏற்றதாக இருக்காது. ஓட்ஸை தினமும் உட்கொண்டால் எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஓட்ஸின் பக்க விளைவுகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 

தினமும் ஓட்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? பக்க விளைவுகள் தெரியுமா? | Side Effects Of Oats

செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்

ஓட்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

ஏற்கனவே இரைப்பை பிரச்சனைகள் இருந்தால் முதலில் குறைவான அளவில் ஓட்ஸை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

ஓட்ஸில் உள்ள க்ளுக்கோஸ், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்றவை பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்களால் உட்கொள்ளப்பட்டு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை வரவழைக்கும்.

தினமும் ஓட்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? பக்க விளைவுகள் தெரியுமா? | Side Effects Of Oats

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்பு

ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் ஓட்ஸை அதிகமாக தங்களின் உணவில் சேர்ப்பார்கள்.

ஆனால் அளவுக்கு அதிகமாக அல்லது தினமும் ஓட்ஸை உட்கொண்டால் அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்பை உண்டாக்கும்.

ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

இதன் விளைவாக நாள் முழுவதும் எந்த உணவுகளையும் உட்கொள்ள ஆர்வம் எழாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

இது தவிர ஓட்ஸை மட்டும் உட்கொள்வது நினைவாற்றல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் விழிப்புணர்வைக் குறைக்கும். 

தினமும் ஓட்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? பக்க விளைவுகள் தெரியுமா? | Side Effects Of Oats

இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்

ஓட்ஸில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும் இது இரத்த சர்க்கரையின் அளவை சட்டென அதிகரிக்க செய்யும்.

அதுவும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்படி உட்கொள்வது ஆபத்தானது. 

எப்போதுமே சர்க்கரை நோயாளிகள் சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதுவும் அனைத்துவிதமான சத்துக்களும் அடங்கியவாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான் அது நன்மை விளைவிக்கும். 

ஓட்ஸ் சாப்பிட நினைக்கும் பலரும் அதை இனிப்பாக சாப்பிட நினைக்கிறார்கள்.

இப்படி ஓட்ஸ் உடன் சர்க்கரை, சாக்லேட் சிப்ஸ் மற்றும் பிற இனிப்புக்களை சேர்த்து உட்கொண்டால் ஓட்ஸில் உள்ள சத்துக்கள் குறைந்து கலோரிகள், சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகரிக்கும்.

அத்தோடு ஆரோக்கியத்தை சீரழித்து இல்லாத சர்க்கரை நோயை வரவழைத்துவிடும். எனவே ஒட்ஸை சாப்பிட சிறந்த வழி என்றால் அது வெஜிடேபிள் ஓட்ஸ் என கூறப்படுகிறது.

தினமும் ஓட்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? பக்க விளைவுகள் தெரியுமா? | Side Effects Of Oats

எடை இழப்பிற்கு பதிலாக எடையை அதிகரிக்கும்

பலர் பேர் ஓட்ஸ் ஆரோக்கியமானது என்பதால் அதிகமாக உணவில் சேர்ப்பார்கள். இப்படி ஓட்ஸை அதிகம் உட்கொண்டால் அது எடை இழப்பிற்கு பதிலாக, உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.

எனவே எடை குறைய வேண்டுமானால் அளவாக சாப்பிட வேண்டும். ஓட்ஸின் சுவையை அதிகரிக்க அதன் மேல் கண்ட டாப்பிங்கை சேர்க்காமல் நட்ஸ், விதைகள் அல்லது பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள். இனிப்புகள் எதையும் சேர்க்காதீர்கள்.