யாழில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்ச்சிபூர்வமாக ஈகை சுடர் திலீபனுக்கு அஞ்சலி!

0
218

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் தமிழ் மக்களின் விடிவுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்  யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது.

கொட்டும் மழையில் மக்கள் அஞ்சலி

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

Jaffna - partheepan

தொடர்ந்து பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நினைவேந்தல் ஆரம்பமான நேரம் யாழில் கடும் மழை பொழிய ஆரம்பித்தது.

Jaffna - partheepan

எனினும் கொட்டும் மழையையும்   மழையினையும் பொருட்படுத்தாது பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வந்த மக்கள் தியாக செம்மல் திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Jaffna - partheepan

அதேவேளை தியாக செம்மல் திலீபனின் நினைவேந்தல் நாளில் இளைஞன் ஒருவர் தூக்குக்காவடி எடுத்து வந்து அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Jaffna - partheepan
Jaffna - partheepan
Jaffna - partheepan