சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் தாக்கப்பட்ட ரயில் நிலைய அதிபர், ஊழியர்கள்!

0
197

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் ரயில் நிலைய அதிபரும் ஊழியர்களும் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஒரு குழுவினர் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்களை கற்களால் தாக்கி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கற்களை வீசி தாக்குதல் நடத்திய குழு

சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் தாக்கப்பட்ட அதிபரும் ஊழியர்களும்! | Employees Assaulted Preventing Urinating On Wall

நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மதுபோதையில் வந்த குழுவினர் ரயில் நிலைய சுவரில் சிறுநீர் கழிக்க முற்பட்டபோது அதற்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே மோதலுக்கு காரணம்.

இதனையடுத்து குழுவினர் கற்களை வீசி மூன்று பூந்தொட்டிகள் மற்றும் பயணிகள் இருக்கையை சேதப்படுத்தியதாக ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.