பல வருடங்களின் பின் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றம்..

0
173

பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைகழகத்தை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

hezbollah university batticaloa

கடந்த காலங்களில் சர்ச்சைக்குள்ளான  பல்கலைக்கழகம்

அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்து அதனை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பலகலைகழகத்தை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை கடந்த காலங்களில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம், சட்டத்துக்குப் புறம்பான முதலீடுகளைக் கொண்டு, அரசியல்வாதிகளின் ஆதரவைக் கொண்டு, சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.