சேனல் 4-ன் அடுத்த ஆவணப்படம் – பிரபல நகைச்சுவை நடிகரின் பாலியல் குற்றங்கள் காணொளி வெளியானது

0
210

நகைச்சுவை நடிகரும் பிரபலமுமான ரஸ்ஸல் பிராண்ட் தனது புகழின் உச்சத்தில் இருந்த ஏழு ஆண்டு காலத்தில் பாலியல் துஸ்ப்பிரயோகம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

சண்டே டைம்ஸ், டைம்ஸ் மற்றும் சனல் 4 இன் டிஸ்பாட்ச்கள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2006 முதல் 2013 வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நான்கு பெண்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் ரஸ்ஸல் பிராண்ட் குற்றச்சாட்டுகளை முன்றிலும் மறுத்து காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்ட ஆண்டுகளில் ரஸ்ஸல் பிராண்ட் பிபிசி ரேடியோ மற்றும் சேனல் 4 மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிகராக பல்வேறு சமயங்களில் பல்வேறு உயர்மட்ட வேலைகளில் இருந்தார்.

ரஸ்ஸல் பிராண்ட் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய காணொளியை ஆவணப்படத்தையும் நேற்று செனல் – 4 வெளியிட்டிருந்தது.

குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குள், பிராண்ட் தனது திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வடமேற்கு லண்டனில் உள்ள 2,000 திறன் கொண்ட ட்ரூபாடோர் வெம்ப்லி பார்க் தியேட்டரில் நகைச்சுவை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வின் போது பிராண்ட் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் அவற்றை நேரடியாக பேசவில்லை. தான் பேச விரும்பிய ஆனால் பேச முடியாத விஷயங்களை பார்வையாளர்களிடம் கூறினார்.

விசாரணையின் ஒரு பகுதியாக பிராண்ட் மீது பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நான்கு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட சண்டே டைம்ஸ்,

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குடைய பிராண்டடின் முக்கியத்துவத்தை இல்லாமலாக்குவதற்கான ஒரு செயலாகவும் இது அமையலாம்.

ஒருவரையொருவர் தெரியாது என்று கூறிய பெரும்பாலான பெண்கள், அநாமதேயமாக இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் பிராண்டுக்கு விரிவான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எட்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டபோது பிராண்ட் தனது YouTube சேனலில் தனது பதில் வீடியோவை வெளியிட்டார் எனவும் குறற்ம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.