உடல் எடைக்கும் கொழுப்புக்கும் தொடர்புள்ளதா..!

0
194

உடல் பருமனை கட்டுப்படுத்த எண்ணியவுடன் பலரும் உடனே தவிர்ப்பது கொழுப்பு சத்தை தான்.

இதனால் உடல் எடை குறைக்க முடியுமா? என கேட்டால் நிச்சயமாக முடியாது. முதலில் நாம் உடல் எவ்வாறு செயற்படுகின்றது என்றால், நாம் உண்ணும் உணவை எரிசக்தியாக மாற்றி நாம் இயங்குவதற்கான சக்தியை கொடுக்கிறது.

தேவைக்கு அதிகமாக சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டே சேமிக்கப்படுகின்றது.

இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது

அதிலும் நாம் மாவுப்பொருளை அதிகமாக சாப்பிடும் போது இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

இதனால் மாவுப்பொருள் விரைவில் குளுக்கோசாக மாற்றப்பட்டு பின்னர் கிளைகோஜனாக மாற்றப்படுகிறது.

உடல் எடைக்கும் கொழுப்புக்கும் தொடர்புள்ளதா? உண்மை தெரிஞ்சிக்க இந்த பதிவை பாருங்க | Relationship Between Body Weight And Fat

அதனால் தேவைக்கு மீறிய சக்தி கொழுப்பாக உடலில் சேமிக்கப்பட்டு மீண்டும் பசி ஏற்படுகின்றது. இதனால் நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் எதை சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக காலையில் 5 இட்லி சாப்பிடுவதுக்கு பதிலாக அதிக புரதம் நிறைந்த 2 முட்டைகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது. குறைவான கலோரியில் அதிக நேரத்துக்கு பசியை கட்டுப்படுத்தக் கூடிய உணவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் உடற் பருமனை விரைவில் குறைக்க முடியும்.

உடல் எடைக்கும் கொழுப்புக்கும் தொடர்புள்ளதா? உண்மை தெரிஞ்சிக்க இந்த பதிவை பாருங்க | Relationship Between Body Weight And Fat

உடல் பருமன் அதிகரிப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவுகள் முழுமையான காரணம் அல்ல, எந்த உணவாக இருந்தாலும் தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது கொழுப்பாகவே மாற்றப்படுகின்றது.

அதனை உணர்ந்து உங்கள் உணவுபழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.