பாடசாலைகளில் சீருடைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பிரான்ஸ்

0
205

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்சில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் பெரும்பாலும் சீருடை அணிவதில்லை.

தனியார் மத பாடசாலைகள் அல்லது இராணுவ பாடசாலைகளிலேயே சீருடை அணியப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சீருடைகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டத்தினை மேற்கொள்ள விரும்புவதாக புதிய கல்வி அமைச்சர் Gabriel Attal அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்க முடியாது எனவும் ஒரு யோசனையினை பெறுவதற்கான சிறந்த வழி பாடசாலைகளில் விடயத்தினை பரிட்சிப்பதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பரிட்சார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பாடசாலைகளை தெரிவு செய்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்ட அபாயா தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.