அவுஸ்திரேலியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு

0
215

ஒக்டோபர் 14ம் திகதி பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ், அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு | A Historic Referendum In Australia

சர்வஜன வாக்கெடுப்பு

சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால்  பூர்வீக இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாது சட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்படும்.

அதேவேளை அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மை மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் ஆறு மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.