இயற்கை முறை பேஷியல்! இனி வீட்டிலேயே செய்யலாம்..

0
311

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவருமே ஆரோக்கியமான முகத்திற்கும், பளபளப்பான முகத்திற்கும் பேஷியல் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

இதனால் நிறைய பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று பேஷியல் செய்து வருகின்றனர்.

அழகு நிலையங்களில் கெமிக்கல் கலந்த பேஷியல் செய்வது அவர்களின் முகத்தில் பருக்கள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

என்னதான் அழகுநிலையங்களில் பழங்கள் பேஷியல் போன்றவை வந்தாலும் நாம் நம் வீட்டிலேயே இயற்கை முறையில் பேஷியல் செய்தால் எந்த வித பிரச்சனைகளும் வராமல் நம் முகம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

வீட்டிலேயே பேஷியல் செய்வது எப்படி?

பேஷியல் செய்வதில் சில செயல்முறைகள் உள்ளது.அதில் முதலில் cleansing, cleansing செய்வதற்கு நம் முதலில் பாலை பயன்படுத்தி நம் முகத்தை மசாஜ் செய்யவேண்டும், சிறிது நேர மசாஜ் செய்ததற்கு பிறகு சுடுதண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

இரண்டாவது scrubing, முகத்தை scrub செய்வதற்கு நாம் வாழைப்பழத்தோலை பயன்படுத்தலாம்.

வாழைப்பழத்தோலை பயன்படுத்தி நம் முகத்தை scrub செய்ததற்கு பிறகு சுடுதண்ணீர் கொண்டு நம் முகத்தை கழுவவேண்டும்.

facial/பேஷியல்

அடுத்து மசாஜ் , உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அதில் நம் முகத்தை மசாஜ் செய்யவேண்டும், முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் நம் முகத்தில் உள்ள ரத்த ஓட்டங்களை அதிகரிக்கும் மேலும் தோல் பளபளப்பாகும்.

இறுதியாக facepack , பப்பாளி பழத்தை விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி நம் முகத்தில் 10-15 நிமிடம் அப்படியே வைத்து பின் சுடுதண்ணீரில் முகத்தை கழுவினால் இயற்கை முறையிலான பேஷியல் முடிந்துவிடும்.

இந்த இயற்கை முறை பேஷியலை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் நீங்கி,நம் தோல் மிகவும் பளபளப்படையும்.