300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்!

0
169

மெக்சிகோவில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது. இந்த குழு கடந்த 1980களில் இருந்தே மெக்சிகோவில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் Santiago Meza Lopez என்பவர் சிக்கினார். இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

1996ல் பண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பெரிய பீப்பாய்க்குள் தண்ணீர் மற்றும் அமிலத்தை கலந்து உடல் பாகங்களை நிரப்பி கரைத்துள்ளனர். மட்டுமின்றி சினாலோவா குழுவினரில் சிலருக்கு தாம் பயிற்சியும் அளித்துள்ளதாக antiago Meza Lopez தெரிவித்துள்ளார்.

300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Chef Dissolved 300 Corpses In Acid Mexico

இவர் கைதான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பொலிஸாரை அணுகி தங்களின் உறவினர்களை அடையாளம் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில் பண்ணை ஒன்றில் இருந்து 200 கிலோ அளவுக்கு மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. அந்த உடல் பாகங்கள் 650 நபர்களின் மிச்சமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.

antiago Meza Lopez தெரிவிக்கையில்,

300 சடலங்கள் வரையில் தாம் அமிலத்தில் கரைத்திருக்கலாம் என விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பொலிஸார் தெரிவிக்கையில்,

தொடர்புடைய பண்ணையில் சடலங்களை தேடுகையில் தங்களுக்கு மனிதர்களின் பற்கள் மட்டுமே கண்டெடுக்க முடிந்தது எனவும் அவை அமிலத்தில் கரைந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சினாலோவா குழு நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யும் சடலங்களை பண்ணை ஒன்றில் அனுப்பி வைப்பதாகவும், அங்கே பெரிய பீப்பாய்களில் அமிலத்தை நிரப்பி உடல்களை கரைத்துள்ளதாக கூறுகின்றனர்.

இதேவேளை, கைதான antiago Meza Lopez-ன் வீடு மொத்தம் பெரிய பீப்பாய்களை சேகரித்து வைத்திருந்ததும் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.