இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் வீரராக ரொனால்டோ சாதனை

0
166

பிரபல நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதனை இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனமான ஹாப்பர் ஹெச்க்யூ அறிவித்துள்ளது.

தற்போது 600 மில்லியன் பின் தொடர்பவர்களை எட்டியுள்ள இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு 3.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன்

போத்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவில் அல் நாசர் குழுவில் சேர்ந்த பின்னரே இன்ஸ்டாகிராமில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாறி உள்ளார்.

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் பின்தொடர்பவர்களின் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

மற்றுமொரு உலக சாதனை படைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ | Cristiano Ronaldo Sets Another Record In Insta

இதன் மூலம் இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று 3.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜூலை மாதம் ஃபோர்ப்ஸால் உலகின் அதிக சம்பளம் வாங்கும் உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.