தன் ஆசைக்கு இணங்காத காதலியை துண்டுகளாக்கிய காதலன்!

0
178

பிரபல யூடியுப் பிரபலமான டேனியல் சான்சோ தனது ஓரினச்சேர்க்கை காதலனை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் தாய்லாந்து நாடு முழுவதும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும், தனது காதலரான 44 வயதாகும் எட்வின் அரியேட்டா அர்டேஜ் என்பவரையே அந்த யூடியுபர் மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

29 வயதுடைய டேனியல் சான்சோ தற்போது தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

டேனியல் சான்சோ, சமையல் கலை தொடர்பிலான யூடியுப் செனல் ஒன்றினையே செய்து வருகின்றார். இதனடிப்படையில், அவருக்கென்று ஒரு தனி முறைமை கொண்டு சந்தாகாரர்களை கவர்ந்து வருபவர்.

சமையலுக்கு உபயோகிக்கும் கத்தி கொண்டு டேனியல் சான்சோ தனது ஆண் காதலனை துண்டுத்துண்டாக நறுக்கினார் என்ற செய்தி தாய்லாந்து நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கொலையில், கொலம்பியாவின் பிரபல பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையாளரான எட்வின் ஏரியடா என்பவரையே கொலை செய்துள்ளார்.

தாய்லாந்தில் விசேடமாக கொண்டாடப்படும் சூப்பர் மூன் கொண்டாட்டத்தை முன்னிட்டு யூடியூபர் டேனியல் சான்சோவும் எட்வினும் தாய்லாந்தில் சந்தித்து தங்கள் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொண்டனர்.

அப்படியான ஒரு தருணத்தில் வேட்கையில் தனது விருப்பத்துக்கு எட்வின் உடன்படவில்லை என்று எட்வினை டேனியல் தாக்கியிருக்கிறார்.

குளியலறையில் எட்வினை கொடுமையாக தாக்கிய டேனியல், இதற்கு மேல் அவரை காப்பாற்ற முடியாது என எண்ணி, அவரை கத்தியால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

துண்டுகளாக்கப்பட்ட உடல் பாகங்களை கடலில் வீசியதுடன், சில துண்டகளை பாதையோரங்களிலும் வீசியுள்ளார்.

அந்த தடயத்தின் அடிப்படையில் தாய்லாந்து பொலிஸார் விரைந்து டேனியலை கைது செய்தனர்.

டேனியல், செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதும் ஏனைய பாகங்களைத் தேடி குழியோடிகளின் உதவியுடன் தாய்லாந்து பொலிஸார் கடலுக்குள் துழாவி வருகிறது.

டேனியல் கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவரது யூடியூப் வீடியோக்கள் பிரபலமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.