ஹாரி பாட்டர் தொடரின் முன்னணி பிரபலம் விபத்தில் உயிரிழப்பு!

0
148

இத்தாலியில் படகில் இருந்து கடலில் விழுந்து ஹாரி பாட்டர் தொடரின் முன்னணி வெளியீட்டாளர் உயிரிழந்துள்ளார்.

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளரான 45 வயதான அட்ரியன் வாகன் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றுள்ளார்.

இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகில் உள்ள சலேர்னோ மாகாணத்தில் உள்ள அமல்பி கடற்கரையில் அவர்கள் ஒரு சிறிய படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர்களின் கப்பல் 85 பேருடன் சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மீது மோதியது.

ஹாரி பாட்டர் தொடரின் முன்னணி பிரபலம் படகு விபத்தில் உயிரிழப்பு! | Harry Potter Novel Series Publisher Dies Italy

இதில் அட்ரியன் கடலில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், புளூம்பெர்க் அமெரிக்க ஜனாதிபதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும் குறித்த விபத்தில் வாகனின் கணவரும் காயமடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர்.