ஓரின சேர்க்கையாளர்களுக்கும் தேவாலயம் திறந்து இருக்கும் – போப்

0
177

போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் மாதம் குடல் இறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த உலக இளையோர் தின கத்தோலிக்க விழாவில் பங்கேற்று விட்டு ரோம் திரும்பினார்.

அப்போது போப் பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார்

அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. தையலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் தசைகள் வலுவாக்கும் வரை இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வயிற்றில் பட்டை அணிந்திருக்க வேண்டும் என் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஓரின சேர்க்கையாளர்களுக்கும் தேவாலயம் திறந்து இருக்கும் | The Church Is Also Open To Gays Pope

ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார். ஓரின சேர்க்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் கத்தோலிக்க தேவாலயம் திறந்து இருக்கும். தேவாலயத்தில் ஒரே பாலின திருமணத்தையோ அல்லது ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களையோ அனுமதிப்பது இல்லை.

சட்டத்தின்படி அவர்கள் ஒரு சில சடங்குகளில் பங்கேற்க முடியாது. விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள் என போப் பிரான்சிஸ் கூறினார்.