20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்த பெண் உயிரிழப்பு!

0
262

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான இந்தியானாவைச் சேர்ந்த35 வயதான ஆஷ்லே சம்மர்ஸ் ( Ashley Summers) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் தண்னீர் குடிப்பது ஆபத்தா?

இவர் கடந்த மாத தொடக்கத்தில் இந்தியானாவில் உள்ள ஏரிக்கு நேரத்தை செலவழிக்க சென்றுள்ளார். அப்போது அவர் லேசான தலைவலி மற்றும் உடலில் நீர் பற்றாக்குறை (dehydration) ஆனது போல உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு 20 நிமிடத்தில் 4 அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அதாவது கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அவருக்கு அன்று தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. ஏரியில் படகு சவாரி செய்துள்ள போதே சம்மர்ஸ் மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் ஹைபோநெட்ரீமியா இருப்பதைக் கண்டறிந்தனர். அவருக்கு நீர் நச்சு (Water toxicity) பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்த பெண் உயிரிழப்பு! | Woman Dies Drinking Two Liter Water In 20 Minutes

ரத்தத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை என கூறப்படுகிறது. உடலில் அதிக நீர் இருக்கும்போது சோடியத்தின் அளவு பெரும்பாலும் குறையுமாம். அந்த நேரத்தில் அதிக தண்ணீர் குடித்ததால் அது செல்களை வீக்கம் அடைய செய்துள்ளதாம்.

குறிப்பாக அவரின் மூளை செல்களை அது வீக்கமடைய செய்துள்ளது. அதனால் மயக்கமடைந்த ஆஷ்லீ சம்மர்ஸ் கோமாவுக்கு சென்று பின் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.