வீழ்ச்சியடையும் நிலையில் வங்கி முறைமை; எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி!

0
200

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் , வங்கி முறைமை தொடர்பில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் தற்போது இலங்கை வங்குரோத்து நாடு எனும் பட்டியலில் உள்ளது. இந்நிலையினை மாற்றியமைத்து முன்னேற்றத்திற்கான வழிமுறைக் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகளில் இடையூறு ஏற்படுமாயின் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையயும் எனக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த தலைவர்களுடனும் நாட்டின் நிலைப் பற்றி கலந்துரையாடினோம்.

கடன் நீடிப்பின் கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும்.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களில் இறக்குமதிக்கு அவசியமான கடன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

வீழ்ச்சியடையும் நிலையில் வங்கி முறைமை; எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி! | The President Warned Banking System Is Collapsing

தற்போதைய பொருளாதார முறைமையினை விடுத்து போட்டித்தன்மையான ஏற்றுமதி பொருளாதாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு முன்னர் கடன் பிரச்சினைகளைநிவர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளோம்.

அதுகுறித்த யோசனைகளை அமைச்சரவையில் சமர்பித்துள்ள அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல் பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.

பின்னர் அந்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தோம்.

நாடாளுமன்றம் அரச நிதிக் குழுவிடம் ஆலோசித்த பின்னர் அதனை ஏற்றுக்கொள்வதற்கான யோசனை அரச நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்டது.

கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், அக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.