நாய்கள் மீது கொண்ட தீராத காதலால் நாயாக மாறிய இளைஞர்!

0
169

ஜப்பான் நாட்ட சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார்.

குறித்த நபர் தனது மனித உருவத்திலிருந்து நாயாக மாறுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் மேல் செலவிட்டுள்ளார்.

இவருக்கு சிறு வயது முதலே நாய்கள் மீது தீராத காதல். நாயாக பிறந்திருக்கலாம் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறிக்கொண்டே இருப்பாராம். திடீரென ஒரு நாள் நாயாகவே மாறி அதிர்ச்சியையும் தந்துள்ளார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் இவரை நாயாக மாற்றியுள்ளது.

மேலும் நாயாக மாற 40 நாட்கள் ஆகியிருக்கிறது. தத்ரூபமாக தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. டோகோ கூலி இனத்தை சேர்ந்த நாயை போல வடிவமைக்கப்பட்டுள்ளார். 

நாய்கள் மீது கொண்ட தீராத காதலால் நாயாகவே மாறிய இளைஞர்! இவ்வளவு செலவா? | Japan Youth Transform Himself To Dog Viral Video

அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.