சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் யாழ் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்

0
433

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது மனைவி ஜேன் யுமிகோ இடோகி உடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர் தொடர்பில் வெளியான தகவல் | Tamil Contesting Singapore Presidential Election

சிங்கப்பூரில் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் 13ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் திகதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார்.

இவர் கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகவும், 2011 – 19 வரை சிங்கப்பூர் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், சர்வதேச நிதியம், உலக பொருளாதார மன்றம், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பிரதான பதவிகளை வகித்துள்ளார்.