உணவுக்குப் பதிலாக பயணிகளுக்கு KFC சிக்கன் வழங்கிய பிரிட்டிஷ் எயார்வேஸ்!

0
259

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானச் சேவையில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக KFC சிக்கன் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23 ஜூலை) பிரிட்டனின் Turks and Caicos தீவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகளுக்கு KFC கோழி வழங்கப்பட்டுள்ளது.

 முறையாகக் குளிரூட்டப்படவில்லை

எனினும் விநியோகிக்கப்பட்ட  KFC சிக்கன்   முறையாகக் குளிரூட்டப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சுமார் 12 மணிநேரப் பயணத்தில் பயணிகளுக்கு உணவளிக்கவேண்டும் என்பதால் விமானச் சிப்பந்திகள் மாற்று வழிகளை யோசித்தனர்.

உணவுக்குப் பதிலாக பயணிகளுக்கு KFC சிக்கன் வழங்கிய பிரிட்டிஷ் எயார்வேஸ்! | British Airways Served Passengers Kfc Chicken

விமானம் சிறிது நேரம் பஹாமாஸில் (Bahamas) நிறுத்தப்பட்டபோது சிப்பந்திகள் KFC உணவகத்திலிருந்து கோழி வாங்கினர்.

மேலும் உணவகத்தில் பொரித்த கோழி பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் வாளிகள் சிலவற்றைச் சிப்பந்திகள் வைத்திக்கும்  காணொளிகள்  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.