இந்திய பாணியில் இலங்கை காவல்துறைக்கும் லத்தி!

0
202

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்திய பாணியில் இலங்கை பொலிஸாருக்கும் லத்தி! | Lathi To The Sri Lankan Police In Indian Style

பொல்லுகளை (லத்தி) பாவிக்கும்  அதிகாரம்

மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி செயற்படவுள்ளார்.

அதேசமயம் இந்தியாவில் சில மாநிலங்களுக்கு ஆயுதங்கள் இல்லாமல், பொல்லுகளை பாவிக்கும் விதத்திலான பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பாணியில் இலங்கை பொலிஸாருக்கும் லத்தி! | Lathi To The Sri Lankan Police In Indian Style

அது போல இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு அப்படி சாதாரண பொலிஸ் கடமைகள் செய்யலாம் எனவும் தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன் அந்த வகையில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார் என கூறினார்