லண்டனில் பல நூற்றாண்டுகளாக தொடரும் அன்னப்பறவைகள் எண்ணும் நிகழ்வு

0
179

லண்டன் மாநகரை வசீகரிக்கும் தேம்ஸ் ஆற்றில் மிதக்கும் வெண்ணிற ஓவியமாய் உள்ள அன்னப்பறவைகள் ஆண்டு தோறும் கணக்கிடப்படுகின்றன.

அதன்படி 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னம் பிடித்து எண்ணும் நிகழ்வு நேற்று தொடங்கியது.

பாரம்பரிய முறைப்படி சிவப்பு கோட்டும் அன்ன பறவையின் இறகு செதுக்கப்பட்ட வெண்ணிற தொப்பி அணிந்த அன்னம் கணக்கெடுப்பாளர் தன் குழுவினருடன் படகு துறையில் குழுமினார்.

நூற்றாண்டுகளை கடந்தும் தொடரும் அன்னப்பறவைகள் எண்ணும் நிகழ்வு | Swan Counting Continues Through The Centuries Uk

குறியீடு இல்லாத அன்னங்கள் அரியணைக்கு சொந்தமானது

இங்கிலாந்து சட்டப்படி திறந்தவெளி நீர்நிலைகளில் உரிமையாளர் குறியீடு இல்லாத எல்லா அன்னங்களும் அரியணைக்கு சொந்தமானது என சட்டம் இருப்பதால் இங்கிலாந்து அரசர் சார்ல்ஸுக்கு மரியாதை செலுத்திய பின்னர் பணியாளர்கள் அன்ன பறவைகளை கணக்கெடுத்தனர்.

5 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் ஆற்றில் 127 கிமீ பயணம் செய்து அன்னப்பறவைகளை கணக்கெடுக்க உள்ளனர்.

நூற்றாண்டுகளை கடந்தும் தொடரும் அன்னப்பறவைகள் எண்ணும் நிகழ்வு | Swan Counting Continues Through The Centuries Uk

அதேவேளை அரச குடும்பங்களுக்கு விருந்துகளுக்கு தேவையான அன்ன பறவை கிடைப்பது தடைபடாது இருக்கவே இந்த ஏற்பாடு கொண்டு வரப்பட்டது.

எனினும் தற்போது அன்னங்கள் உண்ணப்படுவதில்லை என்றாலும் பாரமபரிய அன்னம் எண்ணும் நிகழ்வு நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது.