பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி; வெளியான காரணம்..

0
240

பேராதனை போதனா வைத்தியசாலையில் ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கை தாதியர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

பொத்துபிட்டிய அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வயிற்று வலிக்காக சென்ற சடலமான பெண்

கடந்த 11 ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில்  யுவதி உயிரிழந்ததாக  கூறப்பட்டிருந்தது.  

எனினும் மருத்துவமனையில்  ஊசி போட்ட பின்னரே அவர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இந்நிலையில் அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி உயிரிழந்த சாமோதிக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து தொடர்பாக விளக்கமளித்தது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி; காரணம் இதுதானாம் | Young Woman Who Died In Peradana Hospital

அங்கு உரையாற்றிய அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த, இதில் 10 மில்லி மருந்தை கரைத்து நோயாளிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​நாட்டின் மருத்துவமனை அமைப்பில் தேவையான 10 மில்லி சிரிஞ்சர்கள் இல்லை. ஆனால் இந்த தாதியர் அந்த மருந்தை இரண்டு 5சிசி சிரிஞ்சர்களில் கரைத்து கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.